Friday May 24th 2013

Archives

தமிழகத்தில் பயிற்சி பெறும் இலங்கை இராணுவ அதிகாரிகளை திருப்பி அனுப்பவும்: மன்மோகனுக்கு ஜெய கடிதம்

தமிழ்நாட்டின் குன்னூர் வெலிங்டன் பயிற்சி முகாமில் இலங்கை இராணுவ…

…அதிகாரிகளுக்கு அளிக்கப்படும் பயிற்சியை இரத்து செய்து, சொந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்புமாறு வலியுறுத்தி தமிழக முதல்வர் ஜெயலலிதா, இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்குக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

குன்னூர் வெலிங்டன் பயிற்சி மையத்தில் நடைபெறும் முகாமில் வெளிநாட்டு இராணுவ அதிகாரிகள் 40பேருக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இதில் இலங்கை இராணுவ அதிகாரிகள் நான்கு பேர் கலந்து கொள்ள சென்றுள்ளனர்.

இலங்கை இராணுவ அதிகாரிகள் வந்திருக்கும் தகவலால் நேற்று முதல் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. ம.தி.மு.கவினர் நேற்றே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்று வெலிங்டன் பயிற்சி மைய முற்றுகைப் போராட்டம் நடத்த தமிழ் அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன.

இந்நிலையில் பிரதமர் மன்மோகன்சிங்குக்கு இது தொடர்பாக தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

சென்னை தாம்பரத்தில் பயிற்சி பெற வந்த இலங்கை விமானப் படை வீரர்களை இந்தியாவில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்தியது. ஆனால் அவர்கள் வெளியேற்றப்படவில்லை.

இந்த நிலையில் குன்னூர் வெலிங்டன் பயிற்சி மையத்துக்கு இலங்கை இராணுவ அதிகாரிகள் பயிற்சிக்கு வந்துள்ளனர். தமிழகத்தின் எதிர்ப்பையும் மீறி இலங்கை இராணுவத்தினருக்கு பயிற்சி தரும் மத்திய அரசின் பிடிவாதப் போக்கால் தமிழக மக்கள் கொந்தளிப்புடன் இருக்கின்றனர்.

இலங்கை இராணுவத்தினருக்கான பயிற்சியை இரத்து செய்து அவர்களை சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்ப வேண்டும். இலங்கை இராணுவத்தினருக்கான அனைத்து பயிற்சிகளை ரத்து செய்ய பாதுகாப்பு அமைச்சகத்துக்கு அறிவுறுத்த வேண்டும் என்று அதில் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.

பங்களாதேஷ், சீனா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த இராணுவ அதிகாரிகளும் பங்குபற்றுக்கின்ற இப்பயிற்சியில் உள்ளடங்குகின்றனர்.

Comments

Powered by Facebook Comments

Reader Feedback

One Response to “தமிழகத்தில் பயிற்சி பெறும் இலங்கை இராணுவ அதிகாரிகளை திருப்பி அனுப்பவும்: மன்மோகனுக்கு ஜெய கடிதம்”

  1. Prime Minister Man-moran singh has brought dowm India from Gandhi’s India to Gaddafi’s India. Indian Leaders in power are stained with Human Blood. What a shame!

Leave a Reply