Saturday May 25th 2013

Archives

நில அபகரிப்புக்கு எதிரான மன்னார் போராட்டத்திற்கு வலுவாக லண்டன் கவனயீர்ப்பு போராட்டம்: தமிழீழ அரசாங்கம்

தமிழீழத் தாயகத்தின் மன்னார் மாவட்டத்தில்,

சிங்கள அரசினால் தமிழ் மீனவர்கள் மீது அமுல்படுத்தப்பட்டு வரும் பாஸ் நடமுறைக்கு எதிராகவும் மற்றும் நில அபகரிப்புக்கு எதிராகவும் இடம்பெற்ற போராட்டத்திற்கு வலுவூட்ட லண்டனிலும் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற இக் கவனயீர்ப்பு போராட்டம் பிரித்தானிய பிரதமரின் வாசல்தலத்திற்கு முன்னால் இடம்பெற்றது.

நில அபகரிப்புக்கு எதிரான தாயகத்திலும் புலத்திலும் மேற்கொள்ள்படும் நியாயப்பாடுகளை விளக்கி பிரித்தானிய பிரதமருக்கான மனுவொன்று கையளிக்கப்பட்டுள்ளது.

இப்போராட்டத்தின் ஊடாக புலம்பெயர் தமிழர்களின் தோழமையுணர்வினைத் தாயக மக்களுக்கு தெரிவிக்கவும், போராட்டத்தின் நியாயப்பாடுகளை வெளியுலகிற்கு கொண்டு செல்லவும், இக்கவனயீர்ப்பு போராட்டங்கள் சமாந்திரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Comments

Powered by Facebook Comments

Leave a Reply