Thursday August 22nd 2019

இணைப்புக்கள்

Archives

பருவமழை காரணமாக வவுனியா முகாங்களில் உள்ள மக்கள் பெரும் அவதி

Vavuniya_Campபெய்து வரும் பருவ மழை காரணமாக வவுனியாத் தடுப்பு முகாங்களில் உள்ள இடம்பெயர்ந்த மக்கள் பெரும் இடர்பாடுகளைச் சந்தித்துள்ளனர்.

மக்கள் தங்கியிருந்து கூடாரங்களுக்கும் வெள்ளம் புகுந்ததால் இடம்பெயர்ந்த மக்கள் முகாங்களில் அமைக்கப்பட்ட கல்விக்கூடங்கள், மண்டபங்களுக்கும் தஞ்சம் புகுந்தனர்.

வவுனியாவில் உள்ள மெனிக்பாம் தடுப்பு முகாம் பருவமழை காரணமாக பெரும் பாதிப்புக்குள் உள்ளாகியது.

அத்துடன் தடுப்பு முகாங்களிலிருந்து மீளக்குடியமர்த்துதல் என்ற போர்வையில் கொண்டு செல்லப்பட்ட மக்களும் பருவமழை காரணமாக பாதிப்படைந்துள்ளதாக வுனியாச் செய்திகள் மேலும் தெரிவித்துள்ளன.

Leave a Reply