இந்நிகழ்வானது பிரான்சில் 27.05.2012 ஞயிற்றுக்கிழமை 14.30 மணிக்குபாரிசின் மத்திய பகுதியில் அகவணக்கத்துடன் ஆரம்பமாகியது.
தேசியக்கொடி, தேசியத்தலைவரை முன்னிலைப்படுத்தி தாம் எதற்காக இன்றைய சூழ்நிலையில் இவ் உறுதி நிகழ்வை எடுப்பதற்கான நோக்கம் குறிக்கோள்களை கூடியிருந்த இளையோருக்கு முக்கிய செயற்பாட்டு உறுப்பினர்களால் அறிமுகத்தைத் தொடர்ந்து எடுத்துக்கூறப்பட்டது.
இதன் முக்கிய சாராம்சமாக 10 கோரிக்கைகயை முன்வைப்பதாகவும், வட்டுக்கோட்டைத்தீர்மானம், திம்புப்பேச்சு வார்த்தையில் வைக்கப்பட்ட அடிப்படைக்கோரிக்கைகளை நான்கையும் அத்துடன் எமது இன அடையாளங்களை முன்னிறித்தி கொண்டு செல்வது என்றும் அதற்கான நியாயங்களை வலியுறுத்தி கூடியிருந்தோருக்கு விரிவாக கூறி அவர்களின் ஒப்புதலை பெற்று எல்லோரும் சேர்ந்து ஓங்கிக் குரல் கொடுத்து உறுதியை எடுத்துக்கொண்டனர்.
இந்நிகழ்வானது மிகவும் உணர்வு பூர்வமாக அமைந்திருந்தது உண்மையில் இவ்வாறான உறுதிப்பாட்டை கனடா, இத்தாலி, Nஐர்மனி, இளையோரை அடுத்து பிரான்சு இளையோர் அமைப்பும் எடுத்துக்கொண்டது குறிப்பிடத்தக்கதாகும். தேசியத்தலைவர் அவர்களால் 2008 மாவீரர்நாள் உரையில் தெரிவித்த புலம் பெயர்ந்த நாடுகளில் வாழும், வளர்ந்து வரும் எமது இளையோர்கள் கையில் எமது தாயக விடுதலைப்போராட்டம் கையளிக்கப்படுகின்றது என்பதற்கமைய இது நடந்தேறியது.






Comments
Powered by Facebook Comments