Friday December 6th 2019

Archives

இலங்கைக்கு கொசோவா நிலைமை வரக்கூடாதாம்

Hinduதமிழர்களுக்கான அரசியல் தீர்வு விடயத்தில் கொசோவாவில் ஏற்பட்டது போல இலங்கையிலும் நடந்து விடக்கூடாது என்பதில் கொழும்பு மிகுந்த எச்சரிக்கையாக உள்ளது.

இலங்கைத் தமிழர்களுக்கான அரசியல் தீர்வு விடயத்தில் கொசோவா போன்ற நிலமை இலங்கையிலும் வந்துவிடக்கூடாது என்பதில் தாம் அக்கறையாக இருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சின் செயலாளர் ராஜிவ விஜேசிங்ஹ இந்திய பத்திரிகையான இந்துவுக்கு பேட்டியளித்துள்ளார். ஐக்கியமாக இருப்பது என முதலில் வாக்களித்துவிட்டு இரு வருடங்களின் பின்னர் தனிநாட்டுக்கு ஆதரவு வழங்கிய கொசோவா போல இருக்காமல், வாக்குக் கொடுத்தால் அந்த வாக்கைக் காப்பாற்றுபவர்களாக இருக்க வேண்டும் என அவர் கூறினார்.

சுதந்திரம் கிடைத்ததன் பின்னர் கொழும்பு எடுத்த சில நடவடிக்கைகள் பாரபட்சமாக அமைந்துவிட்டதால் அரசியல் தீர்வு குறித்து கவனம் எடுக்க வேண்டும் எனபதை ஏற்றுக்கொள்வதாக கூறியதோடு 1987 இல் நடைமுறைக்கு கொண்டுவருவதாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதாக இருந்த காலமே புதிய தமிழ் தலைவர்களுடன் சேர்ந்து அடிமட்ட குடியரசை வலுவேற்றுவதற்கான காலமாக இருந்தது என்று கூறினார் விஜேசிங்க.

இப்போது அரசியலில் புதிதான ஒரு ஆரம்பத்துக்குரிய தேவை வந்துள்ளது. 1970 கள் மற்றும் 1980 களில் துரதிர்ஷ்டவசமாக தமிழர்களுக்கு எதிரான வன்முறைகள் நடந்துள்ளன. 1983 ஆம் ஆண்டு நடந்த வன்முறைகளை நிறுத்தாமல் அதற்கு அரசாங்கமும் ஆதரவளித்தது என்றும் பல தமிழர்களுக்கு கசப்பான அனுபவங்கள் பல உள்ளதாகவும் அவர் தனது பேட்டியின்போது ஏற்றுக்கொண்டுள்ளார்.

மேலும் தனது பேட்டியில் பினவருமாறு தொடர்ந்தார்: பல சிக்கல்களைத் தீர்க்க 1987 ஆண்டின் தீர்வை அரசாங்கம் நம்பியிருந்த போதும் அதற்கு விடுதலைப்புலிகளும் இலங்கையின் உள்நாட்டு அரசியலும் ஏற்றுக்கொள்ளாத காரணத்தால் அது நிறைவேறாமல் போய்விட்டது. அதன்பின்னரான 20 வருடங்கள் தமிழர்களின் ஏக பிரதிநிதிகளாக பல வெற்றிகளையும் புலிகள் கண்டிருந்தனர். ஆனால் இதெல்லாம் ஒரு மாயம். தமிழர் இயக்கங்கள் பல இருந்தும் அவை தமக்கென ஒரு கதாநாயகர் போன்ற தோற்றத்தை உருவாக்கிக் கொள்ளவில்லை. 2002 ஆண்டின் சமாதான ஒப்பந்தத்தால் அதிகம் பாதிக்கப்பட்டது இந்த இயக்கங்களே என்று தெரிவித்தார்.

போர் நிறைவுக்கு வந்து மீள் குடியமர்த்தப்பட்டுள்ள தமிழர்கள் விரும்பியது நிறைவேற்று அதிகாரமே அதாவது பாதுகாப்பு தவிர்ந்த சமூக, கல்வி முறைகள் குறித்த முடிவெடுக்கும் உரிமையே. எனவே இப்போது யாழ்ப்பாணத்துக்கென பெண் மேஜர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார் என்று கூறிய விஜேசிங்க, சில ஆரம்பகட்ட சிக்கல்களைத் தாம் தீர்த்து விட்டதாகவும் கூறினார்.

இலங்கையில் இப்போது பல தனியார் நிறுவனங்கள் திறக்கப்பட்டு வருவதால் அங்குள்ள வேலையில்லா பிரச்சனையும் முடிவுக்கு வந்துவிடும் எனவும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply