Thursday June 20th 2013

Archives

இலங்கையின் போர் குற்றச்சாட்டுக்களை திசைதிருப்பும் பரப்புரையே திவயின சிங்கள நாளேட்டின் செய்தி!

சிங்கள நாளேடான திவயின, போர்க்குற்றச் செயல்களில் ஈடுபட்ட ருத்ரகுமாரனுக்கு…

…அமெரிக்க அரசாங்கம் அடைக்கலம் வழங்கியுள்ளதாக செய்தியொன்றை வெளியிட்டுள்ளதானது இலங்கையின் போர் குற்றச்சாட்டுக்களை திசைதிருப்பும் பரப்புரையே என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தகவற்துறை துணை அமைச்சர் சுதன்ராஜ் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற பெயரில், அரச பயங்கரவாத்தினை கட்டவிழ்த்து, ஒரு பெரும் இனப்படுகொலையினை மேற்கொண்டுள்ள இலங்கை அரசாங்கம், தன்மீது சுமத்தப்படும் போர் குற்றசாட்டுக்களை திசைதிருப்பவே, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.ருத்ரகுமாரன் மீது, போர்குற்றச்சாட்டுக்கள் உள்ளதென்ற பரப்புரையினை, தனது ஊடகங்கள் ஊடாக மேற்கொள்கின்றதென, அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இருந்து வெளிவரும் இலங்கை அரச ஆதரவு சிங்கள நாளேடான திவயின, போர்க்குற்றச் செயல்களில் ஈடுபட்ட ருத்ரகுமாரனுக்கு அமெரிக்க அரசாங்கம் அடைக்கலம் வழங்கியுள்ளதாக செய்தியொன்றினை வெளியிட்டுள்ளதோடு, இதற்கான ஆதாரங்கள் இலங்கை அரசாங்கத்திடம் உள்ளது எனவும் செய்தி வெளியிட்டிருந்தது.

இந்செய்தி தொடர்பில் கருத்து தெரிவித்த போதே, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் துணை அமைச்சர் சுதன்ராஜ் மேற்குறித்த கூற்றினைத் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களிலும் இத்தகைய செய்திகளை, சிங்கள ஊடகங்கள் வெளியிட்டு வந்துள்ள நிலையில், சமீபத்திய காலங்களில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினை மையப்படுத்தி பல செய்திகள், சிங்கள ஊடகங்களில் அதிகம் வருகின்றமை, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மீதான, சிங்கள தேசத்தின் அச்சத்தினையே வெளிக்காட்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Comments

Powered by Facebook Comments

Leave a Reply