Sunday October 21st 2018

Archives

சிவகுமாரின் கொலைக்கு நேரில் கண்டவர் சாட்சி

sivaமனநிலை சரியில்லாத தமிழ் இளைஞர் ஒருவரை பம்பலப்பிட்டி கடலில் மூழ்கடித்த சம்பவத்தை நேரில் கண்ட டி.என்.எல் தொலைக்காட்சியில் துணை செய்தி ஆசிரியர் சிசிகெலும் டஹம்பிரியா பாலகே வியாழக்கிழமையன்று கொழும்பு குற்றவியல் நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்துள்ளார். மேற்படி சம்பவத்தைப் பல போலீஸ் காரர்கள் பார்த்துக் கொண்டிருந்ததாலும், அவர்களின் மேற்பார்வையிலேயே அந்த இளைஞர் தாக்கப்பட்டு மூழ்கடிக்கப்பட்டதாலும் இது குறித்து தாம் போலீஸுக்கு முறையிடவில்லை என அவர் கூறினார். கடற்கரையில் நடந்தது என்ன என்பதை தாம் கமரா ரெக்கோடர் மூலமாக பம்பலப்பிட்டி ரயில் நிலையத்தை அடுத்தமைந்துள்ள கட்டடத்தின் 7 ஆவது மாடியில் இருந்து பார்த்ததாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

ஒரு நபரை மூவர் தடிகளால் அடித்தபடியே கடலை நோக்கி துரத்தியதைத் தாம் கண்டதாகவும், ஆனால் துரத்திய மூவரும் போலீஸாரா இல்லையா என்பது தமக்கு தெளிவாக தெரியவில்லை என்றும் கூறிய பாலகே, ஆனால் ஒரே நபரை பலர் தாக்கிய இச்சம்பவம் போலீசின் கண்காணிப்பில் நடந்தது என்பது மட்டும் நிச்சயமாகத் தெரியும் எனக் கூறியுள்ளார்.

கொலைசெய்யப்பட்ட சிவகுமாரின் அண்ணா பாலவர்ணம் கூறும்போது தனது தம்பி 2007 இலிருந்து மனநிலை சரியில்லாமல் இருந்தார் எனக் கூறினார். தனக்கு 5 அக்காவும் ஒரு தங்கையும் இருப்பதாகவும் சிவகுமாரே ஒரேயொரு தம்பி எனவும் கூறிய அவர் ஒக்ரோபர் 30 ஆம் திகதி தமது தம்பியை தாமே அடையாளம் கண்டதாகவும் சொன்னார். இக்கொலை குறித்து தகுந்த விசாரணை நடத்தப்பட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

கடற்படை அதிகாரி உபாலி பிரேமதிலக மற்றும் சிவகுமாரின் நண்பரான யோகராஜா தர்ஷன் ஆஅகியோரும் சாட்சி கூறினர்.

Reader Feedback

One Response to “சிவகுமாரின் கொலைக்கு நேரில் கண்டவர் சாட்சி”

  1. csjeeva says:

    “மனநிலை சரியில்லாத போலீஸ் காரர்கள்”

Leave a Reply