ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோரை இணையத்தளத்தினூடாக தகாத வார்த்தைகளால் பேசிய சிங்கள இளைஞன் ஒருவரை இரகசிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அளவ்வ, புதிய வீதியைச் சேர்ந்த கயான் ராஜபக்ஷ எனும் சிங்கள இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார்.
இவர் மாத்தளை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து எதிர்வரும் 6ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருமான நிமல் மெதிவக்க தகவல் தருகையில் கூறியதாவது:-
மாத்தளை, அலுவிகாரை பிரதேசத்தில் இரகசிய பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புத் தேடுதலொன்றின் போது குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டார்.
இவர் இணையத்தளத்தினூடாக ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆகியோரைத் தகாத வார்தைகளால் பேசியுள்ளார் என்று கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல்களின் பேரிலேயே கைதானார் என தெரிவித்தார்.
ஆகமொத்தத்தில் ராஜபக்ஷ என்ரபெருடன் இருப்பவர்கூட கருத்துசுதந்திரதுடன் இயங்கமுடியாது, ஆனால் பெரிய ராஜபக்ஷர்களுடைய தூதரகங்கள் ஒழுங்குசெய்யும் கிரிகேட்டுப்போட்டிகளில் மட்டும் மொதேவிதமிலன், அல்லது இளையோர்கள் கலந்து சிறப்பித்து சிங்களத்துடன் தமிழருக்கு பினக்கேதும் இல்லை என்று உலகுக்குக்காட்டுவார்கள். எல்லாமே அப்பா அம்மா வளர்தேடுத்ததில்தானே உள்ளது. வெளிநாடுகளுக்கு வந்து சேர்ந்தவுடன் வதிவிடம் வேண்டி இல்லாத தகாத போயசொன்னார்கள், பின்பு வேலைபார்க்குமிடத்தில் அறைகுற வேலைசெய்துவிட்டு போயசொன்னார்கள், சிறிதுகாலம் போனதும் திருமணம்செய்து வாழ்வில் ஓரளவு வேரூன்டியதும் உலப்பதர்க்கு மனமில்லாமல் பொய்சொல்லி ஏதாவது ஒரு வழியில் பணம் வந்தால் போதுமென்று வாழும் நாட்டையும் ஏமாற்றினார்கள். இதற்கிடையில் வாரிசுகள் அன்னைதந்தை அடிச்சுவட்டிலே நடக்கலாம் என்பதியுனர்ந்து அதன்வழியே போகமுற்பட்டார்கள். பாடசாலையில் பொய் ஏமாற்றுதல், வெளியில் பொய் வீட்டில்போய் என்று வளர்ந்து கொண்டே போய் அதுவேவள்கை ம உரையானது. வேறு சிலநாடுகளில் வந்ததுமுதல் உழைப்பதே இல்லை அப்படியுளைத்தாலும் அதிலும் ஒரு தில்லுமுல்லு களவாக உலப்பு காசு சேர்ப்பு ஆனால் அரச உதவியும் கிடைக்கும். இதுதான் தரன்கேட்டுப்போன தமிழீழதிலிருந்து புலம்பெயர்ந்தவர்களின் நிலை!