Tuesday November 12th 2019

இணைப்புக்கள்

Archives

வவுனியா அகதி முகாம் நிலையை அறிய தமிழ்க் கூட்டமைப்பு அங்கு செல்ல ஏற்பாடு

tnaவவுனியாவில் உள்ள நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்களின் நிலைமையை அறிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்

அங்கு செல்ல ஏற்பாடு செய்யப்படுகின்றது.
ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் நாடாளுமன்றஉறுப்பினருமான பஸில் ராஜபக்ஷ கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் இதனை நேற்று இதனைத் தெரிவித்தார்.

நாடாளுமன்ற இடைவேளையின் போது, தமிழ்க் கூட்டமைப்பின் உறுப்பினர்களான சுரேஷ் பிரேமச்சந்திரன், எம்.கே. சிவாஜிலிங்கம், பத்மினி சிதம்பரநாதன் ஆகியோருடன் பஸில் பேசினார். அப்போது, வன்னிமுகாமுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சென்று வர ஏற்பாடு செய்யுமாறு மீள்குடியேற்ற மற்றும் அனர்த்த நிவாரண அமைச்சர் றிசாட் பதியுதீனிடம் தெரிவித்துள்ளதாக பஸில் அவர் களிடம் தெரிவித்தார்.
இது தொடர்பாக கருத்து வெளியிட்ட கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரே மச்சந்திரன் தமிழ்க் கூட்டமைப்பின் எம்.பிக்கள் தனியாகச் சென்று சுதந்திரமாகச் சென்று முகாமில் உள்ள மக்களை பார்வையிட அனுமதி வழங்கப் படுமா? அல்லது ஏனையோரைப் போன்று அரசின் ஏற்பாட்டில் எம்மை அழைத்துச் செல்ல ஒழுங்கு செய்யப்படுமா? எதுவும் கூறப்படவில்லை என்று தெரிவித்தார்.

இது விடயமாக மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண அமைச்சர் றிசாட் பதியுதீனிடம் கேட்ட போது.. எனது அமைச்சின் நாடாளுமன்ற ஆலோசனைக்குழுவில் இடம்பெறும் உறுப்பினர்களை முகாம்களுக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. சகல கட்சிகளின் உறுப்பினர்களும் அந்தக் குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.

அந்தக் குழுவின் அங்கம் வகிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும் அழைத்துச்செல்லப்படவிருக்கின்றனர்.
அவர்கள் தனியாக செல்ல ஏற்பாடு செய்யப்படவில்லை. அரசின் ஏற்பாட்டிலேயே அழைத்துச் செல்லப்படுவார்கள் என்றார் அவர்.

Leave a Reply