Friday December 6th 2019

Archives

பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள நிசாந்த முதுஹெட்டிகம

nishஇலங்கை ஜனாதிபதியின் புதிய எதிர்ப்பாளரும், தென் மாகாணசபையின் உறுப்பினருமான நிசாந்த முதுஹெட்டிகம இன்று காலி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த மாதம் இடம்பெற்ற தென் மாகாண சபை தேர்தலின் போது அரசாங்க அதிபரை பயமுறுத்திய குற்றச்சாட்டின் பேரில் இன்று நீதிமன்றத்திற்கு அவர் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டிருந்தார்.

எனினும், அவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகாமையை அடுத்தே நிசாந்த முதுஹெட்டிகம இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்சிக்கு எதிராக தேர்தல் காலத்தில் மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அகமீமன தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து விலக்கப்பட்ட அவர், ஒழுக்காற்று நடவடிக்கைக்கும் உட்பட்டுள்ளார்.

இதனையடுத்து அவர் ஜனாதிபதியின் முன்னால் சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளாமல், சோதிடர் ஒருவரின் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

Leave a Reply