தமிழீழத் தேசியக் கொடி ஜேர்மனிய Nordrhein westfalen stadium உதைபந்தாட்ட மைதானத்தில் இடம்பெற்ற போட்டி ஆரம்ப அணிவகுப்பில் கடந்த சனிக்கிழமை இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை பொறுஜியா டொட்மென்ட் மற்றும் எப்சீ நியூரம்பேர்க் என்ற அணிகளுக்கிடையிலான போட்டியை முன்னிட்டு நடைபெற்ற அணிவகுப்பிலேயே தமிழீழத் தேசியக் கொடி அனைத்து நாடுகளின் கொடிகளுக்கும் குடுக்கப்படும் மரியாதையுடன் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
தமிழ் இளைஞர் அமைப்பும் பொறுஷியா டொட்மென்ட் ரசிகர்கள் அமைப்பும் ஒன்றிணைந்தே இந்த கொடியினை அணிவகுப்பின் போது கொண்டு சென்றுள்ளனர்.
எமது தேசிய சின்னங்கள் சிங்கள இனவாத அரசினால் அழிக்கப்பட்டுவரும் நிலையில் எமது தமிழீழத் தேசியக்கொடி சுமார் 40 நாடுகளின் தேசியக் கொடிகளுக்கு மத்தியில் ஜேர் மனியில் பிடிக்கப்பட்டுள்ளமை தமிழ் மக்கள் மத்தியில் ஓர் உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது.






Comments
Powered by Facebook Comments