Friday December 6th 2019

Archives

ஈழத்தில் எம் உறவுகள் அழிவது இந்தியாவிற்குத்தான் ஆபத்து : வைகோ

vaiko speechகிருஷ்ணகிரி கார்னேசன் திடல் மைதானத்தில் ம.தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர்,

”சிங்கள அரசு தமிழர்கள் மீது நடத்திய இனப்படு கொலையையும், போர் குற்றங்களையும் அமெரிக்கா, இங்கிலாந்து உள்பட பல்வேறு நாடுகளும் கண்டிக்கின்றன.

இலங்கை அரசு மீது போர் குற்றம் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று
கூறுகின்றன.

சில ஐரோப்பிய நாடுகள் இலங்கை மீது பொருளதார தடை விதித்துள்ளது. ஆனால் இந்திய அரசு ராஜபக்சேவை திருப்பதிக்கு அழைத்து வந்து பூரண கும்ப மரியாதை அளித்துள்ளது. ஈழத்தில் தமிழினம் அழிவது இந்தியாவிற்குத்தான் ஆபத்து.

விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்ட பிறகு இன்று திரிகோணமலையில் சீனர்கள் கால்வைத்து விட்டனர். சிங்கள ராணு வத்துடன் இணைந்து சீன ராணுவ வீரர்கள் தமிழக மீனவர்களை சுட்டு வீழ்த்துகின்றனர்.

ஈழத்தமிழினத்தின் தியாகம் நிச்சயம் வீண் போகாது. மீண்டும் தமிழ் ஈழம் மலரும் அதற்கான போராட்டத்தை பிரபாகரனே முன்னின்று நடத்துவார்’’இவ்வாறு பேசினார்.

Leave a Reply