Friday December 6th 2019

Archives

பிரான்ஸ் தனது மனித உரிமைகள் தூதுவரை இலங்கைக்கு அனுப்புகின்றது

French fmபிரான்ஸ் தனது மனித உரிமை தொடர்பான தூதுவர் ஒருவரை இலங்கைக்கு நவம்பர் 7ம் திகதி அனுப்புகின்றது. பிரான்சிஸ் ஷிமேரா என்ற  தூதுவரையே தாம் அனுப்பவுளதாக பிரெஞ்சு வெளிவிகார அமைச்சர் பேனாட் கெளச்சர் தெரிவித்துள்ளார். தமது தூதுவர் இலங்கையில் தமிழர்கள் விடுவிக்கப்படும் பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டு அவர்களின் நிலை அவர்களுக்கு என்.ஜி.ஓ க்களுதவி செய்யமுடிகின்றதா என்ற விபரங்களை திரட்டி அனுப்புவார் என்றும் கூறிய  கெளச்சர் அவர்கள், இந்த பின்னணியிலேயே மீழ் குடியேறியுள்ள மக்களுக்கு பிரெஞ்சு அரசாங்கம் என்ன வகையான உதவிகளி செய்ய முடியும் என முடிவெடுக்கவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

வரவிருக்கும் மழைகாலத்தில் அகதிகள் பெரும் சிக்கலுக்கு உள்ளாவார்கள், அவர்களை உடனடியாக மீழ் குடியேற்றம் செய்யப்படவேண்டும், உரியவசதிகள் செய்யவேண்டும், சர்வதேச நிறுவனங்களை வேலை செய்ய அனுமதிக்கவேண்டும் அத்துடன் அங்கு இடம்பெற்ற அனைத்து மீறல்களையும் விசாரிக்க பக்கசார்பில்லாத சுதந்திரமான விசாரணை குழு அமைக்கப்படவேண்டும் எனவும் கூறியுள்ளார் திரு கெளச்சர்.

Leave a Reply