Tuesday November 12th 2019

இணைப்புக்கள்

Archives

ஓர் அரசு தனது சொந்த மக்களை விமானத்தால் தாக்கினால் அது போர்க் குற்றம்!: பராக் ஒபாமா

ஓர் அரசு தனது சொந்த மக்கள் மீது விமானங்காளால் குண்டு வீசித்தாக்கினால் அது சர்வதேச போர்க் குற்றம் என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்தார்.

லிபிய சர்வாதிகாரி கேணல் கடாபி தனது சொந்த மக்களுக்கு எதிராக விமானத் தாக்குதல்களை நடாத்தியுள்ளார். அனைத்துக் குற்றங்களுக்கும் அவரே பொறுப்பு என்றும் கோடிட்டுள்ளார். இதனுடைய கருத்து கடாபி அனைத்து குற்றங்களையும் ஏற்று சதாம்உசேன் போல சர்வதேச நீதிமன்ற விசாரணையை சந்திக்க வேண்டும் என்பதுதான்.

மேலும் அவர் இன்னொரு விடயத்தையும் மிகத் தெளிவாகக் கோடிட்டுக் காட்டியுள்ளார். தனது சொந்த நாட்டு மக்களின் மீது போர் விமானத்தை பாவிப்பதும் போர்க்குற்றமே என்ற செய்தியையும் தெளிவாகக் கோடுபோட்டுள்ளார்.

பிரிட்டன் படைத்துறை அமைச்சர் இத்தாக்குதல் பற்றிக் கூறும்போது இது தருணம், இது தேவை, இது கட்டாயம் என்று அழுத்தம் திருத்தமாக தெரிவித்தார். தற்போது ஐ.நாவை சரியான பாதையில் வளைத்து ஓர் உலக ஜனநாயக அணி வீறு கொண்டுள்ளது.

இந்த அணி ஈழத்தமிழினத்திற்கு புதிய விடிவை வரைவு செய்யும் இலக்குவரை போகும் என்பது தமிழ் மக்கள் அறிய வேண்டிய விடயமாகும்.

சிறீலங்கா அரசு நாகர்கோயில் மகாவித்தியாலயத்தில் வீசிய விமானத்தாக்குதல் சர்வதேச போர்க் குற்றத்திற்குள் வருவதை இத்தருணம் உணர்த்தி நிற்கிறது. ஈழத் தமிழர் தமக்கான உரிமையை தெளிவாக வரையறை செய்து வெளிவர சிறந்த முன்னுதாரங்கள் தற்போது சர்வதேச அரங்கில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

மேலும் லிபியா செய்திகள்

Reader Feedback

6 Responses to “ஓர் அரசு தனது சொந்த மக்களை விமானத்தால் தாக்கினால் அது போர்க் குற்றம்!: பராக் ஒபாமா”

 1. malar says:

  ஒரு அரசியலில் ஊழல்கள் என்பதற்கும் இன ஒடுக்குமுறை என்பதற்கும் அப்பால் ஒரு நாட்டு மக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தும் வகையில் தொடர்ந்த இராணுவக் கட்டுப்பாடு விமானக் குண்டு வீச்சு தனித்துவமான ஒரு இனமக்களை அழிப்பதற்காக தொடர்ந்து செயல்பட்டதற்கு அயல்நாடுகளின் உதவிகளையும் சாதகமான முறையில் கையாண்டு வந்துள்ளார்கள் என்பதே முள்ளிவாய்காலிலும் சர்வதேசத்தை அணுகாத அளவு மக்களின் தற்பாது காப்பையும் அழித்து அரசியல் அடிமையாக்கி இருப்பது . அரசியல் கேலிக் கூத்தாக அதிகாரப்பகிர்வைக் கூட நிர்ணயிக்கப்படாத அரசியல் தீர்வாக தொடருவது எம்மினத்தின் சாபக் கேடு என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டிய கடமை. இதனை போர் குற்றம் என்பதோடு மட்டுமல்ல தனித்துவமான அரசியலின் தேவையாக உள்ளது. ஒரு தேசிய இனம் இலங்கை பெரும்பான்மை சிங்கள அரசியலில் சிறைப்பட்டு இருப்பதற்கு சர்வ தேச அரசியல்காரணமாகி விட்டது

 2. பாரதி says:

  “ஓர் அரசு தனது சொந்த மக்கள் மீது விமானங்காளால் குண்டு வீசித்தாக்கினால் அது சர்வதேச போர்க் குற்றம் என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்தார்.” சரி, இதனை ஏன் ஈழத்தமிழர்கள் சிங்களவர்களால் குண்டு வீசி படுகொலை செய்யப் பட்ட போது உலக நாடுகள் தட்டிக் கேட்கவில்லை?
  முக்கிய காரணம் 31 நாடுகள் (ஐரோப்பிய ஒன்றியம் 27 நாடுகள், ஐக்கிய அமெரிக்கா, கனடா, இந்தியா, ஸ்ரீ லங்கா) விடுதலைப் புலிகளை பயங்கரவாத இயக்கமாக தடை செய்திருந்தன. – பயங்கரவாத இயக்கமாக முத்திரை குத்தப்பட்டு, தடை செய்யப்பட்டு, மக்களை வழி நடத்தும் ஒரு விடுதலை இயக்கத்தையும், மக்களையும் எப்படி உலக நாடுகள் காப்பாற்ற முன்வரும் என நாம் எதிர்பார்க்க முடியும்? ராஜதந்திரமாக, பயங்கரவாதிகளை ஒழிப்பதாகவும், உலகிலேயே மிகப்பெரிய பணயக் கைதி மீட்பு நடவடிக்கை என்றும் சொல்லி தமிழர்களை விமானங்காளால் குண்டு வீசியும், ஆட்டிலறி மூலம் நச்சு இரசாயனக் குண்டுகளையும் வீசி விசர் நாய்களை அடைத்து வைத்து கொல்வது போல மகிந்தவும் அவனது கூலிக் கூட்டமும் கொன்றொழித்த போது மேற்கத்தைய நாடுகளால் போர் நிறுத்தத்தை நடைமுறைப் படுத்தும்படி கேட்பதைத் தவிர சட்டப்படி எதுவும் செய்ய முடியாதே. R2P என்பதைப் பாவித்து நம்மைக் காப்பாற்றும்படி மேற்கத்தைய நாடுகளில் நாம் மேற்கொண்ட சாத்வீகப் போராட்டங்கள் யாவும் பயனின்றிப் போனதன் காரணம்: விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகளாக சித்திரிக்கப்பட்டு தடை செய்யப்பட்டிருந்தது.

 3. nila says:

  The same thing happened in SriLanka but all the nations including Mr Obama and UNO are closed their eyes untill killed all innocent people.
  Why Why Why ????????

 4. என் உறவுகள் கொல்லப்படும்போது வாய் மூடி நின்ற ஜநா இப்போது வரிந்து கொட்டிகொன்டு வருவது அங்கே பெட்ரொல் உல்லது என்பதாலா – எல்லம் வேசம், நமக்கு உண்டான விடுதலை நாமே வெண்றெடுக்க வேண்டும் – எவனும் உதவ மாட்டன் -ஒபாமா அல்ல யார் வந்தாலும் இது தான் நிஜம்

 5. பாரதி says:

  நமது விடுதலையை நாமே வென்றெடுக்க வேண்டும் என்பதில் எந்த விதமான கருத்து வேறுபாடும் இருக்க முடியாது. ஆனால் எப்படி வென்றெடுக்க வேண்டும்?

  உலக நடப்பிற்கமைய, காலத்திற்கு ஏற்றபடி, தந்திரோபாயமாக, இராஜதந்திரமாக, எமது மக்களின் விலை மதிக்க முடியாத உயிர்களை காப்பாற்றுவதற்காக போர்முனையில் பின்வாங்க வேண்டுமானால் பின்வாங்கி ( நாமாவது அடிபணிவதாவது என்ற ஆணவத்துடன் எதிரிக்கு நமது மக்களைக் கொல்வதற்கு சந்தர்ப்பத்தை நாமே ஏற்படுத்திக் கொடுக்காமல்) நேரம் சரியாக வரும் போது, வெற்றிக்கொடி நாட்டி விடுதலையை வென்றெடுக்க வேண்டும்.

 6. Sunthar says:

  Well done Obama ! ,but too late for us, why were you not able to pronounce so before when Tamils were killed by srilanka?
  Is it because Tamils are not the citizen of srilanka?
  Then you agree with us. we are a Nation. Srilanka attacked us from air.
  SO YOU ARE CORRECT.

Leave a Reply