தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வனுக்கு பிரான்ஸில் சிலை வைக்கப்பட்டமை தொடர்பில், இலங்கையில் உள்ள பிரான்ஸ் தூதரகம் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
இந்த அறிக்கையில் உள்ளுர் அதிகாரிகளின் சட்டத்துக்கு உட்பட்ட எந்த செயலுக்கும் பிரான்ஸின் மத்திய அரசாங்கம் தலையிட முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த நவம்பவர் மாதம் 1ம் திகதி இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது, தமிழ்ச்செல்வனின் சிலை திறந்து வைக்கப்பட்டது.
இதற்கு லாகோர்னேவே பகுதியின் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் சிலரும் கலந்து கொண்டிருந்தனர்.
பிரான்ஸின் சட்டமுறையின் படி, தனி மனிதனுக்கும் அவர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் சுதந்திரம் உள்ளது.
எனவே இந்த செயற்பாட்டையும் பிரான்ஸ் அரசாங்கத்தினால் எதிர்க்க முடியாது எனவும், இது சட்டத்துக்கு முரணான செயற்பாடாக கருத முடியாது எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






Comments
Powered by Facebook Comments