Thursday August 22nd 2019

இணைப்புக்கள்

Archives

சிவாஜிலிங்கம், செல்வம் அடைக்கலநாதன் நாடு திருப்பினர்! குற்றத் தடுப்பு புலனாய்வுப் பிரிவினர் விசாரணை!

sivajilingam_selvam_adaikalanathanதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் மற்றும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் சிறீலங்கா குற்றத் தடுப்பு புலனாய்வுப் பிரிவினரால் கட்டுநாயக்க வானூர்த்தி நிலையத்தில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

சிவாஜிலிங்கம் 18 மாதங்களாக இந்தியா, பிரித்தானியாவில் தங்கியருந்தார். இதேபோன்று செல்வம் அடைக்கலநாதன் 10 மாதங்களாக இந்தியாவில் தங்கியிருந்துள்ளார்.

இன்று வியாழக்கிழமை இருவரும் சென்னையிலிருந்து கொழும்பு கட்டுநாயக்க வானூர்த்தி நிலையம் சென்றடைந்துள்ளனர்.

சிறீலங்காவின் இறைமைக்கு எதிராக  பொங்கு தமிழ் நிகழ்வுகளில் கலந்து கொண்டு அரசாங்கத்திற்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையில் செ.கஜேந்திரன், பா.அரியநேத்திரன், கே.சிவாஜிலிங்கம் மற்றும் எஸ்.ஜெயனந்தமூர்த்தி குற்றத் தடுப்பு பயங்கரவாதப் பிரிவினர் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர்.

இன்று நாடு திரும்பிய இரு நாடாளுமன்ற உறுப்பினர்களும் பாராளுமன்ற அமர்வுகளில் இன்று கலந்துகொண்டுள்ளனர். அத்துடன் வானூர்த்தி நிலையத்தில் விசாரணைக்கு உள்ளாகிய செல்வம் அடைக்கலநாதனை மாலைக்குள் வாக்கு மூலத்தைப் பதிவு செய்ய வருமாறு குற்றத் தடுப்புப் புலனாய்வுப் பிரிவினர் அறிவித்துள்ளனர்.

Leave a Reply