அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட சிறிலங்காவின் அரச தலைவர் தேர்தலை முதலில் நடத்துவது என்று அரச தலைவர் மகிந்த ராஜபக்ச முடிவெடுத்துள்ளார். தேர்தல் வேலைகளை ஆரம்பிக்கும்படி அவர் தேர்தல் ஆணையாளருக்கு உத்தரவிட்டுள்ளார். இது குறித்த வர்த்தமானி அறிவித்தலை அச்சிடுவதற்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அரச தலைவர் தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் ஆகியவற்றில் எதனை முதலில் நடத்துவது என்பது தொடர்பில் அரசு தரப்பில் கடந்த சில வாரங்களாகவே தொடர்ந்து நீடித்துவந்த மர்மம் நேற்று தீர்ந்தது. அரச தலைவர் தேர்தலை நடத்துமாறு கட்சி அங்கத்தவர்கள் கோரியதை அடுத்து தீவிர ஆலோசனையின் பின்னர் அரச தலைவர் மகிந்த அரச தலைவர் தேர்தலை முதலில் நடத்துவது என்று தீர்மானித்துள்ளார்.
தேர்தலுக்கான வேட்புமனுக்கோரும் அறிவிப்பு அடங்கிய வர்த்தமானி ஓரிரு நாட்களில் வெளியாகும் என்றும் அதனை தொடர்ந்து ஜனவரி 22 இல் தேர்தல் நடைபெறுவதற்கான சாத்தியக்கூறுகள் தென்படுவதாகவும் கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.






Comments
Powered by Facebook Comments