Tuesday November 20th 2018

Archives

சாகடிக்கப்பட்ட சகோதரனுக்காக சர்வதேசங்களில் வாழும் உறவுகளே! கண்ணீர் சிந்துங்கள். காரணம் கேளுங்கள்: அகத்தியன்

sivaஈழத்தமிழர்கள் மீதான இன அழிப்பு இன்று இலங்கை அரசினால் மிகவும் கொடிய காட்டுமிராண்டித் தனமானதாகவும், கட்டுக்கடங்காத நிலையையும் நோக்கி வளர்ந்து செல்வதை
சர்வதேசம் கண்டுகொள்ளுமா? இல்லை கண்களை இறுக மூடிக்கொள்ளுமா என்ற பெரும் கேள்விக்குறியுடன் சர்வதேசத்தை உலகத் தமிழினம் உன்னிப்பாகக் காத்திருக்கின்றது.

தூரதேசங்களில் வாழ்ந்து கொண்டு துயரங்களைப் பகிர்நது கொள்ளும் துர்பபாக்கிய நிலையில் நாம்……

கடந்தவாரம் கொழும்பில் பம்பலப்பிட்டிக் கடற்கரையில் பல்லாயிரக்ககணக்கான மக்கள் முன்னிலையில் மனோநிலைபாதிக்கப்பட்ட தமிழ் இளைஞர் ஒருவர் இலங்கையின் பொலிஸ் அதிகாரி ஒருவர் சிங்களக் காடையர்கள் சிலருடன் சேர்நது கட்டைகளால் தாக்கி கடலிலகள். இந்த அராஜகத்தை சுற்றிநின்ற பார்தத பல்லாயிரக்கணக்கான மக்களில் யாரும் தடுக்க முயற்சிக்கவில்லை. காரணம் இந்தக் கொடுமையைச் செய்தவர் இலங்கை அரசின் நன்மதிப்பைப் பெற்ற ஒர் பொலிஸ் அதிகாரி என்பது மட்டுமல்ல, தாக்குதலுக்கு உள்ளானவர் ஒரு தமிழ் இளைஞர் என்பதாகும்.

அதுமட்டுமல்லாது மேற்படி இளைஞர் தாயகத்தில் காலத்திற்குக் காலம் தென்னிலங்கையில் பேரினவாதிகளின் திட்டமிட்ட இனவெறித் தாக்குதல்களின்போது பலதடவை சொத்திழந்து சுகமிழந்து சொந்தங்களின் பெரும்பகுதியை இழந்து ஆறுதல்கூற யாருமற்ற நிலையில் தவித்து நின்று தன்னை மறந்த நிலையில் வாழ்நத மனநோயாளி என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

மேற்படி இளைஞர் செய்த குற்றம் என்னவென்று விசாரித்துப் பார்ததால் நிலத்தில் கிடந்த கல்லை எடுத்த சும்மா எதேச்சையாக எறிந்துகொண்டு திரிந்ததுதான். அதனைத் தடுக்க வேண்டுமாயின், பொலிசார் அவனைக் கைது செய்து சிறையிலடைத்திருக்கலாம். இல்லை மனநோயாளி என்பது கண்டுபிடிக்கப்பட்டால் அவனை மனநோயாளர் வைத்தியசாலையில் அனுமதித்திருக்கலாம்.

இறந்தவர் ஒரு சிங்கள இளைஞர் என்றால் இந்த நடவடிக்கையைச் செய்திருப்பார்களா இலங்கையின் பொலிஸ் திணைக்களம். ஆனால் அவர் ஒரு தமிழ் இளைஞர் என்ற காரணத்தினால் காடையர் கூட்டத்தினருடன் சேர்நது கட்டைகளால் தாக்கி கடலில் தள்ளிக் கொலை செய்திருக்கின்றார் ஒரு பொலிஸ் உயர் அதிகாரி.

அங்கு நின்றவர்களில் சிலர் காலம் தாழ்த்தியென்றாலும் கைநீட்டிக் கேட்டபோதுதான் கண்துடைப்பாக மேற்படி பொலிஸ் அதிகாரி கைது செய்யப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது.

அவரும் சில காலங்கள் பாதுகாப்பாக இருந்துவிட்டு, பதவி உயர்வும் பாராட்டும் வழங்கி அவரை வெளியே கொண்டு வருவார் மாண்புமிகு ஜனாதிபதி அவர்கள். அதுதானே காலம் காலமாக இலங்கையில் சிங்கள இன அரசியல்வாதிகள் செய்து வரும் தி(தெ)ருக் கூத்து.

கடந் த காலங்களில்பல்லாயிரக்கணக்கான தமிழ்ப் பெண்கள் கொடூரமான முறையில் கற்பழிக்கப்பட்டும், அதன் பின்னர் காணாமல்போயும் உள்ளனர். அதற்குக் காரணமானவர்களுக்கு இலங்கை அரசு உலகத்தின் கண்களை மறைக்க கண்துடைப்பிற்காகக் கைது செய்தது. பின்னர் பதவி உயர்வும், பதக்கங்களும் வழங்கி படாடோபமாகப் பவனிவரும் வகையில் கௌரவித்திருக்கின்றது. இதுதானே காலங்காலமாக அரங்கேறி வரும் கபட நாடகம்.

என்ன செய்வது தட்டிக்கேட்க ஆளில்லாவிட்டால் தம்பி தண்டப்பிரசண்டம் என்று பாட்டிமார் அன்று அறியாமலா சொன்னார்கள். என்ன இருந்தாலும் பேரினவாதிகளினால் சாகடிக்கப்பட்ட எம் சகோதரனே! இறக்கும்போது நீ எங்களை எல்லாம் எண்ணியிருப்பாயே! கோடிக்கணக்கான உலகெங்கும் கூடியிருந்தும், கும்பிட்டுக் கேட்டும் கூட கொட்டன் தடிகொண்டு தாக்கி தண்ணீரில் தள்ளி கோரமாகக் கொலை செய்யப்பட்ட அந்தக் கடைசி நேரத்தின்போது உன் அவலக்குரல் யாருக்கும் கேட்கவில்லையே!

குணக்கேடு கெட்டவர்களிடம் கும்பிட்டுப்பார் தாயாமே? குலை நடுக்கம் கொள்கிறதே இதயம். ஐயோ என் இனிய உறவே இறக்கும்போது என்னவெல்லாம் நினைத்திருப்பாய்? இதற்கெல்லாம் காலதேவன் எப்படியும் கணக்கெழுதித் தீருவான்.

காசியப்பன் பரம்பரை கல்லறைக்குள் பெற்ற தந்தையையே உயிருடன் வைத்துக் கட்டியவர்கள். இதுமட்டுமா செய்வார்கள். இதுவும் செய்வார்கள் இதற்கு மேலும் செய்வார்கள் . ஆனால் என்றாவது ஒருநாள் இவர்கள் எரிந்து சாம்பராவார்கள் அந்த நாள் வெகுதூரத்திலில்லை. ஆதிக்க வெறிகொண்ட பலரை அழித்து சாம்பராக்கிய காலம் இவர்களுக்கும்
கணக்கெழுதித்தான் தீரும்.

ஆனாலும் கூட இன்றும் வால்பிடித்து நிற்கும் வகையற்றவர்கள் பலர் எம்மிடையே இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களுக்குச் சொல்லுகிறேன் உங்களுக்கும் இதேபோன்ற ஓர் வக்கிரதண்டாயுதம் வகையாகக் காத்திருக்கின்றது மறந்து விடாதீரகள்.

ஆனாலும் இறந்துபோன சகோதரனுக்காக இரண்டுசொட்டுக் கண்ணீராவது விட்டீர்களா இரக்கமற்றவர்களே! தள்ளிநின்று தத்துவம் பேசுபவர்களே! என்ன செல்லப் போகின்றீரகள் இந்தக் கொலைக்கு? எட்டி நின்று எள்ளிநகையாடுபவர்களே! என்ன தீரபபு எழுதப் போகின்றீரகள்.

என்ன மௌனமாகிவிட்டீர்கள். மனம் மரத்துப்போய்விட்டதா? இல்லை சுயநலத்தில் சொர்க்கத்தைக் காணுகின்றீர்களா? சொல்லுங்கள். நீங்கள் பேசமாட்டீர்கள். எங்களுக்குத் தெரியும். ஏனென்றால் உங்களிடம் மனிதநேயம் தோற்றுப்போய்விட்டது மட்டுமல்ல உங்களுக்குள்ளே இருந்த மனிதமும் மரணித்துப்போய்விட்டது.

எங்களின் இனிய உடன்பிறப்பே! துடிதுடிக்க துன்புறுத்தி துரத்திவிட்டனரே ஆழ்கடலில் அமிழ்நதுபோக. தள்ளிக் கொலை செய்திருக்கின்றார்

உந்தன் இழப்பினால் இதயம் இரத்திக்கண்ணீர் வடிக்கும் நேரத்தில், உனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு அந்தப் பொல்லாதவர்கள் பதில் சொல்லியே தீரவேண்டும்.

அதுவரை சர்வதேச நீதிதேவதையின் கதவுகளைத் தட்டிக்கொண்டே இருப்போம்.

மீணடும் நீ மலரப்போகும் தமிழீழத்தின் மைந்தனாகப் பிறப்பெடுக்க வேண்டும். அதனை நீ கண்ணாரக் காண வேண்டும்.

வருவாய் மீணடுயம்! வளம் பெறுவாய் நாளும் காத்திருப்போம் அந்த நாளுக்காய்.

எல்லையற்ற தமிழரின் இதயக்குமுறல

Leave a Reply