தமிழ் மக்களின் வாழ்விடங்களில் உள்ள வளங்களை சுரண்டும் நடவடிக்கையில் சிறீலங்கா அரசு இறங்கியுள்ளது. யாழ்ப்பாணம், முல்லைத்தீவு பிரதேசங்களில் நீண்டகாலம் வருமானதம் தரக்கூடிய பயனுள்ள வருவாயினை ஈட்டிக்கொள்ளக்கூடிய மரமாக தென்னைமரம், பனைமரங்கள் காணப்படுகின்றது.
தெங்கு உற்பத்தியின் அபிவிருத்தி என்ற பெயரில் தமிழ் மக்களின் இவ்வாறன வழளங்கள் சுரண்டப்படவுள்ளன. வடக்கில் தெங்கு உற்பத்திக்கு 302 இலட்சம் ரூபா ஒதுக்கீடு செய்துள்ள சிறீலங்கா அரசு 100 தென்னங்கன்று உற்பத்தி நிலையங்களையும் 10 தேங்காய் எண்ணை உற்பத்தி நிலையங்களையும் அமைக்கவுள்ளது.
யாழ்ப்பாணத்தில் முகாமாலை தொடக்கம் பளைவரையான பகுதி தெங்கு உற்பத்தி பகுதியாகவும் முல்லைத்தீவின் தேவிபுரம் தொடக்கம் அளம்பில் செம்மலைவரையான கடற்கரைப் பகுதிகளும் தெங்கு உற்பத்தி நிறைந்த பகுதிகளாக காணப்பட்டுள்ளன.
இவை அனைத்தும் தமிழ் மக்களுக்கே உரித்தானது. இவ்வாறன நிலையில் குறிப்பிட்ட இடங்களில் மக்களை குடியமர்த்தாத சிறீலங்கா அரசு அங்குள்ள தமிழ்மக்களின் வளங்களை எடுத்து வருவாயினை ஈட்டிக்கொள்ளும் செயற்பாடுகளின் ஈடுபட்டுள்ளது.