“ஈழத்தில் துன்பப்பட்டுக்கொண்டிருந்த தமிழ் உறவுகளுக்காக நான் மேற்கொண்ட 23 நாள் உண்ணாவிரத போராட்டத்தில் எனது தியாகம் உண்மையானது. இந்தச் சோதனையான தருணத்தில் என்னுடைய நேர்மையை சந்தேகப்படாமல் என்னுடன் துணை நின்ற அனைவருக்கும் நான் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்” – என்று பரமேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
தன் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்த பத்திரிகைகளுக்கு எதிராக தாக்கல் செய்த வழக்கில் வெற்றிபெற்ற பரமேஸ்வரன் நீதிமன்றுக்கு வெளியே ஊடகவியலாளர்களிடம் பேசுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.
பரமேஸ்வரன் இன்று கூறியதாவது: “இந்தப் பிரச்சினை தற்போது தீர்க்கப்பட்டுவிட்டதால் எனது மனச்சுமை குறைக்கப்பட்டுள்ளதுடன் நான் மீண்டும் எனது வாழ்க்கையைக் கட்டியெழுப்ப ஆரம்பிக்க முடியும்.
கடந்த 8 மாத காலமாக எனது வாழ்க்கை தாங்கிக்கொள்ள முடியாத சிரமங்கள் நிறைந்ததாக இருந்ததுடன் அந்தக் கால கட்டங்களில் எனது சொந்தவாழ்வை முடித்துக்கொள்ளும் அளவிற்குக் கூட சிந்தித்து இருக்கிறேன். குறித்த பத்திரிகைகள் பிரசுரித்த பொய்யான செய்திகளின் விளைவாக என்னில் எந்தத் தவறும் இல்லாதபோதும் நான் எனது நண்பர்களை இழந்தேன். எனது குடும்பத்தினரால் கைவிடப்பட்டேன். அத்துடன் தமிழ் சமூகத்தினரால் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டேன்.
லண்டன் பத்திரிகைகள் குறிப்பிட்ட செய்தியை வெளியிட்ட பின்னர் எனக்கு மிகுந்த விரக்தி ஏற்பட்டது. எனது போராட்டத்தை கொச்சைப்படுத்தியதால் ஏற்பட்ட வேதனையால் தற்கொலை செய்துகொள்ளலாமா என்றுகூட எண்ணினேன். பலர் எனது கைத்தொலைபேசிக்கு பரமேஸ்வரனை கொல்லுங்கள், பரமேஸ்வரன் துரோகி என்றெல்லாம் குறுந்தகவல்கள் அனுப்பினர். பலர் கொலைமிரட்டல் விடுத்தனர்
குறித்த இரு பத்திரிக்கைகளுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்து அப்பத்திரிகைகள் பிரசுரித்த குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என்பதை எனது உண்ணாவிரத காலத்தில் எனக்கு ஆதரவு அளித்தவர்களுக்கும் என்னை மதித்து என்னுடன் உதவியாக நின்றவர்களுக்கும் நிருபிக்க வேண்டியது எனது கடமை என்பதை நான் உணர்ந்தேன்.
தற்பொழுது இரு பத்திரிகைகளும் குறிப்பிட்ட குற்றச்சாட்டுக்கள் முற்றிலும் பொய்யானவை என்பதை அறிவித்துள்ளதுடன் மன்னிப்பும் கோரியுள்ளன என்பதால் அந்த மக்கள் பத்திரிகைகளின் மன்னிப்புக்கோரலை ஏற்றுக்கொள்வதுடன் நான் எந்தத் தவறும் செய்யவில்லை என்பதைப் புரிந்துகொள்வார்களென நான் மனப்புர்வமாக நம்புகிறேன்.
ஈழத்தில் துன்பப்பட்டுக்கொண்டிருந்த தமிழ் உறவுகளுக்காக நான் மேற்கொண்ட 23 நாள் உண்ணாவிரத போராட்டத்தில் எனது தியாகம் உண்மையானது. இந்தச் சோதனையான தருணத்தில் என்னுடைய நேர்மையை சந்தேகப்படாமல் என்னுடன் துணை நின்ற அனைவருக்கும் நான் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.”

















‘தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தர்மம் இறுதியில் வெல்லும்’.
The truth will always Win ; தியாகம and உண்மை are Twins;no matter what is come to bock.
மே 18க்கு பிறகு தமிழ் மக்களுக்கு கிடைத்த முதல் வெற்றி இது.
அண்ணா வாழ்த்துக்கள்.
Congratulations to Parameswaran and Tamils all over the world for the verdict in British soil for Tamil cause… Just the beginning of victory many more to come!!!
நடிகர் திலகமும் நகைச்சுவை நடிகருமான விமல் வீரவன்ச உண்ணாவிரதத்தில் லெமன் பொப் பிஸ்கற் சாப்பிட்ட மாதிரி நினைத்தார்கள் போலும் அந்த சிங்கள அரக்கன் ராஜபக்ஷ குடும்பத்தினர்.தம்பி பரமேஸ்வரன் எங்கள் தானைத் தலைவன் உதித்த மண்ணில் பிறந்த வீரனடா .நாங்கள் சொன்னதை செய்து முடிப்பவர்கள்.