Tuesday August 20th 2019

இணைப்புக்கள்

Archives

தலைவன் வருவான்டா தமிழா…

ராஜா ராஜா சோழன் கொடுத்தாண்ட புலிக்கொடி.
தொடுத்தான்ர என் அண்ணன் ஈழத்தில் சோழப்போரை.
என் அண்ணன் மறுபடியும் வருவான்ரா தமிழ் ஈழம் வென்று தருவான்ரா
தளராதே தமிழா தளராதே…

தமிழீழத்தில் புலிக்கொடி பறக்கும் தளராதே தமிழா.
முப்படையும் வரும் மும் முனையிலும் மோதும்.
பண்டாரவன்னியன் ஆண்டவன்னி மண்ணடா.
என் அண்ணன் ஈழமண்ணில் எதிரிகள் யாவரையும் விடப்போவதில்லை.
எதிரியின் உடல்கள் யாவும் வந்து குவியுமடா வன்னிமண்ணிலே.
தளராதே தமிழா தளராதே…

நீரில் எரியும் திபமடா வற்றாப்பளை தீயில் எரிவதா.
அண்ணன் விடப் போவதில்லையடா .
இங்கு எங்கே சிங்களவனை ஆழவிட்டது யாரடா .
அண்ணன் படை விரட்டுமடா .
இங்கு தமிழன் ஆளுவானடா .
தளராதே தமிழா தளராதே..

அண்ணன் சொல்லில் அண்ணன் படை தமிழீழம் படைக்குமடா
காலம் வரும் நல்ல நேரம் வரும் .
கண்ணிமைக்கும் நேரத்தில் அண்ணன் படை பாயும் .
எதிரி கண்ணில் ஈழமண்ணை துவுமாடா .
தளராதே தமிழா தளராதே .

அண்ணன் படை தமிழீழம் வென்று தரும்.
மகிந்தாவின் மானம் தெருவெங்கும் நாய் இழுக்கும் .
தமிழனின் வீரம் புலிக்கொடியாய் வானில் பறக்குமடா .
சோனியாவின் துண்டு சாணியாக மாறும் .
தளராதே தமிழா அண்ணனின் கையில் இன்னும் வீரமுண்டு .
தளராதே தமிழா தளராதே தமிழா தளராதே தமிழா..

பாமினி.

Reader Feedback

2 Responses to “தலைவன் வருவான்டா தமிழா…”

 1. பொய்மைகளை விதைக்கும் எழுத்தாளர்களும் நமது சமூகத்தின் சாபக்கேடுதான்!
  தாமரை காருண்யன்
  ஆயிரம் பூக்கள் பகுதி வாசகர்களும் பங்குகொண்டு விவாதிக்கக்கூடிய ஒரு களம். இங்கு முன்வைக்கப்படும் கருத்துகளுக்கான எதிர்வினைகளுக்கும் மாற்றுக் கருத்துகளுக்கும் இடமளிக்க பொங்குதமிழ் தயாராகவே உள்ளது.

  முன்வைக்கப்படும் கருத்துகள் விவாதங்களோடு தொடர்பானதாகவும் ஊடக அறம் சார்ந்ததாகவும் இருத்தல் வேண்டும். கட்டுரைகளை சுருக்கவும் தவிர்க்கவும் ஆசிரியருக்கு உரிமையுண்டு

  தலைவர் பிரபாகரனின் வீரச்சாவு குறித்துத் தொடரும் சர்ச்சை: காரணங்கள் எவை? என்ற கட்டுரைக்கான கோபி என்பவரின் எதிர்வினை குறித்த பதிற்குறிப்பு இது.

  கோபி எழுதியவரின் உண்மைப் பெயரா அல்லது புனைபெயரா அல்லது இப் பெயரால் பரவலாக அறியப்பட்ட ஒருவரா என்பது தெரியவில்லை. எழுதிய விதத்தைப் பார்க்கும் போது அவர் சொந்தப் பெயரில்தான் எழுதியுள்ளார் போல் தெரிகிறது.

  ஒரு எழுத்தாளன் தனது எழுத்துக்குரிய அறநெறிகளைப் பேணிக் கொண்டு, தான் வாழும் நாட்டின் சூழல், சமூகச் சூழல், எழுதும் விடயங்களின் தன்மை, எழுத்தாளனின் விருப்பு போன்றவற்றைக் கவனத்திற்கொண்டு புனைபெயர்களில் எழுதும் வழமை உலகளாவிய ஒரு நடைமுறைதான்.

  இதனால் ஒரு எழுத்து சொந்தப் பெயரில் எழுதப்படுகிறதா அல்லது புனைபெயரில் எழுதப்படுகிறதா என்பதனைவிட எழுதப்படும் விடயம்தான் முக்கியமானது.

  இங்கு பெயரில் உண்மை இருக்கிறதா இல்லையா என்பதனை விட எழுதப்படும் எழுத்தில் உண்மை இருக்கிறதா இல்லையா என்பதுதான் முக்கியம்.

  தலைவர் பிரபாகரனின் வீரச்சாவு தொடர்பான கட்டுரையினை முழுமையாக, ஆழமாகப் படித்து விட்டுத்தான் கோபி தனது எதிர்வினையினை எழுதினாரா என்ற கேள்வியும் இவரது எழுத்தைப் படிக்கும் போது எழுகிறது.

  உண்மையில் கோபி என்னதான் சொல்ல வருகிறார்? தலைவர் பிரபாகரன் வீரச்சாவு அடைந்து விட்டாரா? அல்லது இல்லையா? அல்லது இவ்விடயம் தொடர்பாக எந்தவொரு முடிவுக்கும் இவரால் போகமுடியாதிருக்கிறதா? அல்லது தலைவர் வீரச்சாவு அடைந்து விட்டார் என நம்புபவர்கள் அவருக்கு மரியாதை வணக்கம் செலுத்தக்கூடாது என்கிறாரா? இது குறித்து குழப்பமற்ற தெளிவான கருத்து எதனையும் கோபி முன்வைத்ததாகத் தெரியவில்லை.

  இது இவருக்கு இவ்விடயத்தில் உள்ள குழப்பத்தினால் நிகழ்ந்ததா அல்லது எல்லோருக்கும் பிடி கொடுக்காத இவரது ‘சாமர்த்தியத்தின்’ வெளிப்பாடுதானா என்பதும் புரியவில்லை.

  ஓன்று மட்டும் தெளிவாகப் புரிகிறது.

  தலைவர் பிரபாகரனுக்கு மரியாதை வணக்கம் செய்ய வேண்டும் என்று சொல்பவர்களை, தலைவரை நிராகரிப்பவர்களாகவும், அவரது இடத்துக்கு வேறு ஒருவரை அரியாசனம் ஏற்ற முயல்பவர்களாவும் சித்தரித்து, தலைவர் பிரபாகரனுக்கு மரியாதை வணக்கம் செலுத்த வேண்டும் என எழும் குரல்களை அடக்க வேண்டும் என்ற முனைப்பு மட்டும் இவரது எழுத்தில் துல்லியமாகத் தெரிகிறது.

  இது மிகப் பெரும் அநியாயம் கோபி.

  பொங்குதமிழில் இக் கட்டுரைத்தொடர் தைத் திருநாளன்று (14.01.2010) ஆரம்பித்தபோது குறிப்பிடப்பட்டிருந்த சில பகுதிகளை இவ் அங்கத்திலும் மீளக் குறித்திருந்தோம்.

  அறிஞர் சத்தியேந்திரா தலைவர் பிரபாகரனுக்கு செய்திருந்த மரியாதை வணக்கம் தொடர்பாகவும் தலைவர் பிரபாகரனின் வீரச்சாவினை ஏற்று, அவரது சரிகளோடும் தவறுகளோடும் அவர் வாழ்ந்த நான்கு தசாப்த கால போராட்ட வாழ்வுக்கு கட்டுரைத் தொடர் மரியாதை செலுத்துகிறது எனவும் குறிப்பிட்டிருந்தோம்.

  இங்கு ‘தவறுகள்’ எனக் குறிப்பிட்டமை கோபிக்கு எரிச்சல் ஊட்டியுள்ளது போல் தெரிகிறது.

  உலகில் எந்த விடுதலைப் போராட்டமும் சரிகளோடும் தவறுகளுடனும்தான் நடைபெற்றிருக்கிறது. உலகின் எந்தத் தலைவரது அரசியலும் சரிகளோடும் தவறுகளோடும்தான் இடம் பெறுகிறது. தலைவர் பிரபாகரனின் போராட்ட வாழ்க்கையும் இப் பொது நியதிக்கு உட்பட்டதுதான்.

  இதனைத் தலைவர் பிரபாகரனே கூறியிருக்கிறார்.

  ‘நான் கடவுள் இல்லை. என்னிடம் எல்லாப் பிரச்சனைகளுக்கும் தீர்வினை எதிர்பார்க்காதீர்கள்’ எனவும்

  ‘நாம் செய்பவையெல்லாம் சரியாக இருக்கும் எனச் சொல்ல முடியாது. நமது செயல்கள் சரிகளோடும் தவறுகளுடனும்தான் இருக்கின்றன. இவை 50-60 % சரியாக அமைந்தாலே போதுமானது’ எனவும்

  தலைவர் பிரபாகரன் தனது நெருக்கமானவர்களுடனான மனந்திறந்த உரையாடல்களில் தெரிவித்திருக்கிறார்.

  இக் கட்டுரைத்தொடர், தனது முதல் அங்கத்தில் குறிப்பிட்டவாறு தலைவர் பிரபாகரனுக்குரிய மரியாதையினை வழங்கிய வண்ணம்தான் தனது கருத்துக்களைக் குறித்து வருகிறது.

  இக் கட்டுரைத் தொடருக்கு தலைவர் பிரபாகரன் தொடர்பாக வஞ்சகப்புகழ்ச்சி செய்ய வேண்டிய தேவை எதுவும் இல்லை. வஞ்சகப்புகழ்ச்சி செய்யும் பழக்கமும் தாமரையிடம் கிடையாது.

  தலைவர் பிரபாகரன் மீது வஞ்சகப்புகழ்ச்சி இக் கட்டுரையில் செய்யப்பட்டுள்ளது எனக் கோபி கருதினால் அது எந்த இடத்தில் செய்யப்பட்டிருக்கிறது என்பதனைக் குறிப்பிட்டிருக்க வேண்டும். அப்போது அது வஞ்சகப்புகழ்ச்சிதானா என்பதனைப் படிப்பவர்கள் புரிந்து கொள்ள வாய்ப்பு ஏற்பட்டிருக்கும். அதை விடுத்து, கட்டுரை கூற வந்த விடயத்தைக்கூட உரியமுறையில் கவனத்திற்கெடுக்காது வஞ்சகப்புகழ்ச்சி செய்யப்படுகிறது எனக் குற்றஞ்சாட்டுவது கட்டுரை கூறவரும் விடயத்தை திசைதிருப்ப திட்டமிட்டு மேற்கொள்ளப்படுகிற வஞ்சகச்செயலோ என சந்தேகம் எழுகிறது.

  அறிஞர் சத்தியேந்திராவினைத் துணைக்கழைத்திருப்பதாகவும் தனது வாதத்துக்கான காரணத்தை முன் வைப்பதற்கு குறைந்தபட்ச முயற்சியினைத் தாமரை எடுக்கவில்லை எனவும் குறைப்பட்டிருக்கிறார் கோபி.

  தலைவர் பிரபாகரனுக்கு சத்தியேந்திரா எழுதிய மரியாதை வணக்கக் குறிப்பொன்றில் சுவிஸில் இருந்து எழுதிய கிருஸ்ணா அம்பலவாணர் எழுதிய கருத்தொன்றில் தான் உடன்படுவதாகக்கூறி அவரைத் ‘துணைக்கழைத்திருந்தார்’.

  இதுதான் அந்தக் கருத்து.

  ‘ …மேதகு வே. பிரபாகரன் அவர்களின் மரணம் தொடர்பாக இருக்கின்ற முரண்பாடான கருத்துகள், அடுத்த கட்டம் பற்றிய எமது சிந்தனைகளையும் மாற்று நடவடிக்கைகளையும் முடக்கிப் போட்டிருக்கிறது. அந்த மரணம் ஈழத் தமிழனத்தால் மட்டுமன்றி உலகத் தமிழினத்தாலேயே ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாக – ஜீரணிக்க முடியாத ஒன்றாக இருப்பினும் யதார்த்த நிலையில் இருந்துதான் அதை நாம் நோக்க வேண்டும்… இந்த விடயத்தில் ஈழத் தமிழினம் பிளவுபட்டு நிற்பது வேதனைக்கு உரியது. வெட்கத்துக்கு உரியது. தனது வாழ்வின் 37 வருடங்களை முழுமையாகவே ஈழத் தமிழருக்காகவே அர்ப்பணித்த ஒரு ஒப்பற்ற தலைவனுக்கு இறுதி மரியாதை கூடச் செய்ய முடியாதளவுக்கு நாம் முட்டாள்களாக நிற்கிறோம்…’

  ஒருவரது கருத்துக்களை இன்னொருவர் பயன்படுத்துவதும் அதனை உரியமுறையில் வெளிப்படுத்துவதும் அறிவியல் வளர்ச்சிக்குத் தேவையான நடைமுறையாக உலகளவில் பின்பற்றப்படுகிறது. இந்த வகையில் இக் கட்டுரைத் தொடரும் சத்தியேந்திராவின் கருத்தொன்றைப் பயன்படுத்தியிருந்தது.

  சத்தியேந்திராவை மதிப்புக்குரியராகக் கருதும் கோபி தலைவர் வீரச்சாவு விடயத்தில் அவரது கருத்தினை மதிப்புக்குரியதாகக் கருதவில்லைப் போலும்.

  மேலும், தலைவர் பிரபாகரனின் வீரச்சாவு குறித்த முடிவுக்கு விசாரணைகளின் அடிப்படைகளிலேயே சென்றதாக கட்டுரைத்தொடர் பின்வருமாறு குறிப்பிடுகிறது.

  ‘இந்த விசாரணைகள், முள்ளிவாய்க்காலின் இறுதி நாட்கள் வரை தலைவர் பிரபாகரன் முள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்தமைக்கான ஆதாரபூர்வமான தகவல்கள், சிறிலங்கா அரசபடைகள் முள்ளிவாய்க்கால் பகுதியினை முற்றுகை செய்து வைத்திருந்த விதம், தலைவர் பிரபாகரனின் உடலம் குறித்த விவாதங்கள், இவ் விடயம் தொடர்பாக எஞ்சியிருந்த விடுதலைப்புலிகள் அமைப்பினரிடையே இருந்த கருத்துக்கள், அவர்களது செயற்பாடுகள், உலக நாடுகளின் அரச இயந்திரங்கள் மற்றும் போராட்டங்கள் குறித்த ஆய்வாளர்கள் இவ்விடயம் குறித்து வகுத்துக் கொண்ட முடிவுகள், சிறிலங்கா அரசும் இராணுவ இயந்திரமும் ஆசுவாசமாக தற்பொழுது இயங்கிக் கொள்ளும் முறைமை உட்பட்ட பல விடயங்களை ஆய்வு செய்தே தலைவர் பிரபாகரன் வீரச்சாவு அடைந்து விட்டார் என்ற முடிவுக்கு இக் கட்டுரைத் தொடர் வருகிறது.’

  இக் கட்டுரைத் தொடர் பல்வேறு தகவல் மூலங்களில் இருந்து திரட்டப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டுதான் எழுதப்படுகிறது என்பதனை ஏற்கனவே தெரிவித்திருந்தோம்.

  தலைவர் பிரபாகரன் வீரச்சாவு விடயம் தொடர்பாக நாம் திரட்டியிருந்த தகவல்களை ஆராய்ந்து பார்த்தபோது இவர் உயிருடன் இருப்பதாக நம்புவதற்கு எவ்வித அடிப்படைகளும் இருக்கவில்லை.

  நாம் திரட்டியிருந்த தகவல்களில், அவரது வீரச்சாவு எப்போது, எவ்வாறு நடந்தது என்பது தொடர்பான மாறுபாடான தகவல்கள் இருந்தனவேயன்றி, இவர் வீரச்சாவடைந்து விட்டார் என்பதில் முரண்பாடான தகவல்கள் ஏதும் இருக்கவில்லை.

  இதேவேளை, அவர் உயிருடன் இருப்பதாக வாதிடுபவர்கள், அவர் உயிருடன் இருப்பதாக நம்புவதற்கான ஆதாரங்கள் எதனையும் முன்வைக்கவும் இல்லை.

  தனது விசாரணைகளின் அடிப்படையில் தலைவர் பிரபாகரன் வீரச்சாவடைந்து விட்டார் என்ற முடிவுக்கு வந்த இக் கட்டுரைத்தொடர், தலைவர் வீரச்சவடைந்த ஓராண்டு நினைவுக் காலகட்டத்தில் அவருக்குரிய மரியாதை வணக்கத்தைச் செலுத்தியது.

  உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேச விரும்பாத எவரும் இதனைத்தான் செய்வார்கள். இவ்வாறு செய்வதற்கு, தனக்குத் தானே உண்மையாக நடப்பதற்கு எவரது அனுமதியும் சம்மதமும் தேவை இல்லை.

  சரியெனப்பட்டதைப் பேசுவதற்கு நேர்மைதான் தேவையேயன்றி, எவரையும் திருப்திப்படுத்தும், நிற்கும் இடத்தை மறைக்கும் சாமர்த்தியம் எதுவும் தேவையில்லை.

  தலைவர் பிரபாகரன் வீரச்சாவடைந்த செய்தி சிறிலங்கா அரசின் ஊடாகவே முதலில் வெளிவந்தது. அதுவும் குழப்பமான முறையிலேயே வெளிவந்தது. இக் குழப்பம், தலைவர் பிரபாகரனுக்கு மிக எழுச்சியான வீர வணக்க நிகழ்வுகள் தமிழகத்திலும் புலத்திலும் இடம் பெறக்கூடாதென்பதற்காக இந்தியதரப்பின் ஆலோசனையுடன் சிறிலங்கா அரசால் திட்டமிட்டே செய்யப்பட்டது என்ற உதாசீனம் செய்ய முடியாத ஒரு தகவலும் உண்டு.

  வன்னிப்படுகொலை நடைபெற்றக் கொண்டிருந்தபோது முத்துக்குமார் உட்பட்ட பலர் தீக்குளித்து, அவர்களின் ஈகம் தமிழகத்தில் தமிழ்த் தேசிய உணர்வினை கொதிப்படைய வைத்திருந்த ஒரு சூழலில் தலைவர் பிரபாகரனின் வீரச்சாவுச் செய்தி தமிழகத்தில் ஏற்படுத்தக்கூடிய அதிர்வுகள் குறித்த அச்சம் இந்திய ஆட்சியாளர்களிடம் இருந்த ஒரு பின்னணியில் இருந்தே இந்தத் தகவலையும் நாம் நோக்க வேண்டும்.

  முள்ளிவாய்க்காலில் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 17 ஆம் திகதிவரை தலைவர் இருந்தமைக்கான ஆதாரபூர்வமான தகவல் உண்டு. சிறிலங்கா படைகளின் முற்றுகையினை உடைத்துப் புறப்பட்ட தலைவரும் அவரது அணியும் மீண்டு வரவில்லை. அவரது வீரச்சாவு முற்றுகை உடைப்பு முயற்சியின்போதுதான் நடந்திருக்கிறது. உண்மையில் என்ன நடந்தது என்பதைக்கூற தலைவருடன் இறுதிக்கணம் வரை இருந்த போராளிகளில் ஒருவர்கூட மீண்டு வரவில்லை.

  இச் சூழலில் தலைவர் பிரபாகரன் வீரச்சாவு எப்போது, எவ்வாறு நிகழ்ந்தது தொடர்பாக குழப்பும் ஏற்படுவதற்கான வாய்ப்பு உண்டுதான்.

  ஆனால் அறிவின் துணையுடன் உண்மையினைத் தேடும் எவருக்கும் தலைவர் வீரச்சாவடைந்து விட்டார் என்பதனை உணர்ந்து கொள்வதில் எவ்விதக் குழப்பமும் ஏற்படுவதற்கான அடிப்படைகள் ஏதும் இல்லை.

  வாழ்க்கையில் நாம் கனவிலும் விரும்பாத செய்தி ஒன்றினை நமது மனம் இலகுவில் ஏற்றுக் கொள்வதில்லை. இத்தகைய விடயங்களில் நமது அறிவுக்கும் மனதுக்குமிடையே பெரும் போராட்டமே நடைபெறுவதுண்டு. தலைவர் வீரச்சாவு விடயத்திலும் மக்கள் பலரது நிலை இவ்வாறுதான் இருந்தது.

  தமது மனதுக்கும் அறிவுக்குமிடையே போராடிக் கொண்டிருந்த மக்களுக்கு உண்மையினை உணர்த்தியிருக்க வேண்டியதே பொறுப்பானவர்களின் செய்கையாக இருந்திருக்க வேண்டும்.

  ஆனால், மிகவும் வேதனையான விடயம் என்னவென்றால், வேலியே பயிரை மேய்வது போல இங்கு பொறுப்பானவர்களே பொய்யுரைத்து நிற்கிறார்கள். தலைவர் வீரச்சாவு அடைந்து விட்டார் என்ற முடிவுக்குத் தாமே வந்து விட்டு மக்கள் மத்தியில் அதனை மறுதலித்து நிற்கிறார்கள்.

  தலைவர் பிரபாகரன் வீரச்சாவு குறித்த நிலைப்பாடு தொடர்பாக திரட்டப்பட்ட தகவல்களின் அடிப்படையில் நான்கு வகையான பகுதியினரை இனங்காண முடிந்தது.

  தலைவர் பிரபாகரனின் வீரச்சாவினை ஏற்றுக்கொண்ட, இதேவேளை அவருக்கு மரியாதை வணக்கம் செலுத்துவதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்ட ஒரு பகுதியினர்.

  தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக உறுதியாக நம்பிக் கொண்டிருக்கும் ஒரு பகுதியினர்.

  தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்பதில் தெளிவான முடிவுக்கு வரமுடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கும் ஒரு பகுதியினர்.

  தலைவர் பிரபாகரன் வீரச்சாவடைந்து விட்டார் என்ற முடிவுக்கு தாமே வந்து விட்டு, நேரடியாகவும் மறைமுகமாகவும் தலைவர் உயிருடன் இருப்பதாகப் பொய்யுரைத்துக் கொண்டிருக்கும் ஒரு பகுதியினர்.

  இந் நான்கு பகுதியினரில், தலைவர் உயிருடன் இருக்கிறார் என்று உண்மையாக நம்பும் மக்களை, தலைவர் வீரச்சாவு விடயத்தில் ஒரு முடிவுக்கு வரமுடியாது தவிப்பவர்களை கட்டுரை ஆதரவுடன்தான் அணுகியிருந்தது.

  இறுதியாகக் குறிப்பிடப்பட்ட, தலைவர் வீரச்சாவு விடயத்தில் பொய்யுரைத்து இயங்கிக் கொண்டிருப்பவர்கள் மீதுதான் கட்டுரை தனது கோபத்தை வெளிப்படுத்தியிருந்தது. இவர்கள் இவ்வாறு இயங்குவதற்கான காரணங்களையும் குறிப்பிட்டிருந்தது.

  இவர்கள் உண்மையில் தலைவர் உயிருடன் இருப்பதாக நம்பிக் கொண்டு, அதனை மக்களுக்குக் கூறியிருந்தால் இவர்கள் மீது நமக்கு கோபம் ஏற்பட்டிருக்காது. ஆனால் தாம் உண்மையென கருதுவதை மக்களிடம் கூறாது திட்டமிட்ட முறையில் மறைத்து பொய்யுரைத்தவாறு இவர்கள் இயங்குவதுதான் இவர்கள் மீதான கோபத்தை ஏற்படுத்துகிறது.

  இக் கோபமும் இவர்கள் மீதான தனிப்பட்ட கோபம் அல்ல. தலைவர் வீரச்சாவு விடயத்தில் இவர்கள் எடுத்திருக்கும் அரசியல் முடிவின் மீதான கோபம்தான் இது. எவர் மீதும் பழி தீர்க்கும் நோக்கம் எதுவும் இக் கட்டுரைக்கு கிடையாது.

  இவர்கள் மீது மட்டுமல்ல, இவ் விடயத்தில், தமக்குள் தாமே தலைவர் வீரச்சாவு அடைந்து விட்டார் என்ற முடிவுக்கு வந்து விட்டு, தலைவர் உயிருடன் இருப்பதாக நேரடியாகவும் மறைமுகமாகவும் பொய்மைகளை விதைத்துக் கொண்டிருக்கும் எழுத்தாளர்கள் மீதும் நமக்கு கோபம் உண்டு. இவர்களும் நமது சமூகத்தின் சாபக்கேடுதான்.

  இப் பகுதியினரில் கோபி எப் பிரிவினுள் அடங்குகிறார்?

  நேரடியாக தனது எதிர்வினையில் அவர் இது பற்றிப் பேசாதுவிடினும், இவரது எழுத்தை ஆழ்ந்து நோக்கும்போது தலைவர் வீரச் சாவடைந்து விட்டார் என்ற முடிவுக்குத்தானே வந்து விட்டு, உயிருடன் இருப்பதான பொய்மையினை விதைக்கும் கூட்டத்தில் ஒருவராகத்தான் இவரும்

 2. koopu says:

  THE POVERTY INDIA GAVE A DATE TO FINISH THI SO CALLED MASSCARE…ON THIS PARTICULAR DAY..SINHALA GOVT.MADE AN ANNOUNCEMENT ABOUT HIS DETAH…BUT WITH CONFUSING NEWS..TO PROVE THIS THEY HAVE EVEN RELEASED A PHOTO….JUST ONE SIMPLE QUESTION…….HE HAS REMOVED HSI MOUSTACHE MANY YEARS AGO..HOW COME THE BODY IN THIS PHOTO HAS A CLEAN CUT MOUSTACHE..??? SECONDLY HE WAS IN BUNKER FOR DAYS HOW COME HE WAS ABLE TO TAKE FULL SHAVE..THE FACE IN THIS PHOTO IS WITH CLEAN..SHINING FACE…??? THIRDLY…EVEN REBELS WHO HAVE LOST LEGS AND HANDS HAVE ESCAPED ON THE FINAL DAY..SO IF PERSONS WITHOUT LIMBS CAN ESCAPE THE BIG GUYS ALSO CAN…..RECENT NEWS AND EVENST SHOWS ..THAT SOME BIG ONES ARE ALIVE…BUT THEY WILL NEVER EXPOSE THEMSELVES…BUT PULL THE STRING IN BEHIND….YOU CANT FORGIVE A SOCIETY WHICH KILLED 50,000 DEFENCELESS..BABIES..YOUNG AND OLDS AND BURIED IN NADI KADAL BEACH…ALSO POVERTY INDIA WHO SUPPLIED NOT ONLY CHEMICAL WEAPONS AND ARMY PERSONNELS…REMEMBER YASIR ARAFAT IS GONE BUT PALESTINIANS THRISTY FOR FREEDOM IS STILL BURNING..ISRAELIES ARE UNABLE TO SLEEP IN PEACE….WAKE UP…THINK POSITIVE….

Leave a Reply