Monday August 3rd 2015

இணைப்புக்கள்

Archives

நாட்டைப் பிளவுபடுத்த அனுமதியேன்: மஹிந்த

President-Mahinda-Rajapaksaஇலங்கை ஒரு ஐக்கிய நாடாக முன்னோக்கி நகர வேண்டும். நாட்டை எந்தவொரு காரணத்துக்காகவும் பிளவுபடுத்த அனுதிக்க மாட்டேன் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அபிவிருத்தியின் போது எந்தவித பாரபட்சமும் காட்டவில்லை. அனைத்து மேலும்… »

முப்படையினரின் எண்ணிக்கை குறைக்கப்படாது: ருவான் விஜயவர்த்தன

ruwanதேசிய பாதுகாப்புத் தொடர்பில் அரசாங்கம் அதிக அக்கறையோடு இருக்கின்றது.

அப்படியான நிலையில் முப்படையினரின் எண்ணிக்கை குறைக்கப்படவுள்ளதாக வெளியாகும் செய்திகளில் உண்மை இல்லை என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தன தெரிவித்துள்ளார். மேலும்… »

தமிழ்த் தேசியத்தின் எதிர்காலம்?! (சிறப்புக் கட்டுரை: சிவதாசன் டினேஷன்)

tnaஈழப்போராட்டத்தின் ஆயுதப்போராட்ட வடிவம் மெளனிக்கப்பட்டு ஆறு ஆண்டுகள் கடந்த நிலையில், கடந்த ஜனவரி 08ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலை தொடர்ந்து, மிக முக்கியத்துவம் வாய்ந்த பாராளுமன்ற தேர்தல் இப்போது களை கட்டியிருக்கிறது. தமிழர் தரப்புக்கு மட்டுமல்ல தென்னிலங்கைக்கும் முக்கியமான தேர்தலாக பலராலும் மேலும்… »

பூகோள அரசியலில் தமிழ் மக்களின் காத்திரமான வகிபாகத்தைப் பயன்படுத்தி உரிமைகளை வென்றெடுக்க வேண்டும்: த.தே.ம.மு விஞ்ஞாபனம்!

TNPFஇலங்கையை முன்வைத்து நிகழும் பூகோள அரசியலில் தமிழ் மக்கள் காத்திரமான பங்கினை வகிக்கின்றனர். அதனைப் பயன்படுத்தி அரசியலுரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்கான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான மேலும்… »

பொதுத் தேர்தல் 2015: தபால் மூல வாக்களிப்பு இன்று ஆரம்பம்!

mahinda-deshapriyaஎதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று திங்கட்கிழமை (ஒகஸ்ட் 03, 2015) ஆரம்பமாகியுள்ளது.

ஆசிரியர், பொலிஸ் அதிகாரிகளுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று நடைபெறுகின்றது. ஆரம்பிக்கப்படவுள்ள க. பொ. த. உயர்தரப் பரீட்சை கடமையில் ஈடுபடவுள்ள மேலும்… »

குறுக்கு வழியில் போகிறதா ஐ.நா.? – சுபத்ரா

unhcrபோரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பாக விசாரிக்க உள்நாட்டு விசாரணைப் பொறிமுறை ஒன்றை ஏற்படுத்த ஐ.நாவும்,

இலங்கை அரசாங்கமும் இரகசியமான இணக்கமொன்றுக்கு வந்துள்ளதா என்ற சந்தேகம் ஊடகங்கள், சிவில் சமூகம் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் மத்தியில் பரவலாக மேலும்… »

தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலின்றி அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும்: சோபித தேரர்

Sobhitha Theraநாட்டில் தொடர்ந்து வரும் தேசியப் பிரச்சினைகளுக்கு தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையில் அதிகாரங்களைப் பகிர்வதன் மூலம் தீர்வு காண முடியும் என்று சமூக நீதிக்கான தேசிய அமைப்பின் ஏற்பாட்டாளர் மாதுளுவாவே சோபித தேரர் தெரிவித்துள்ளார். மேலும்… »

சமஷ்டிக் கோரிக்கைக்கான தமிழ் மக்களின் ஆணையை கவனிக்க சர்வதேசம் காத்திருக்கின்றது: எம்.ஏ.சுமந்திரன்

sumanthiran_1தமிழ் மக்களின் அரசியலுரிமைப் பிரச்சினைகள் சமஷ்டி அதிகாரப் பரவலாக்கத்தின் மூலம் தீர்க்கப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்துள்ள திட்டத்திற்கான தமிழ் மக்களின் ஆதரவைக் கவனிப்பதற்காக சர்வதேசம் காத்திருக்கின்றது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். மேலும்… »

இலங்கை மீதான ஐ.நா. அறிக்கை வெளியீட்டின் பின்னரே விசாரணைப் பொறிமுறை இறுதி செய்யப்படும்: ஐ.நா

un n sl flagஇலங்கை இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான ஐக்கிய நாடுகளின் விசாரணை அறிக்கை வெளியிடப்பட்ட பின்னரே உள்ளக விசாரணைப் பொறிமுறையா அல்லது சர்வதேச விசாரணையா என்பது தொடர்பில் இறுதி செய்யப்படும் என்று ஐக்கிய நாடுகளின் பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் தெரிவித்துள்ளார். மேலும்… »

வலிகாமம் வடக்கில் சுகபோகமாக வாழ்ந்துவிட்ட இராணுவம் வெளியேற மறுக்கிறது: டி.எம்.சுவாமிநாதன்

srilயாழ் வலிகாமம் வடக்கில் பொது மக்களின் காணிகளில் நீண்ட காலமாக சுகபோகமாக வாழ்ந்துவிட்ட இராணுவம் வெளியேற மறுக்கின்றது என்று மீள்குடியேற்றத்துறை அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் நல்லூரில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற நல்லாட்சிக்கான மேலும்… »

Page 1 of 1,33212345...102030...Last »